Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:35

[1] யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.

[2] பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

[3] இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.

சங்கீதம் — Chapters