Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:56

[1] யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்?

[2] எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்? என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்?

[3] என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன்.

[4] அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள்.

[5] ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.

[6] யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.

சங்கீதம் — Chapters