Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:07

[1] அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.

[2] இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.

[3] அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.

[4] யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

[5] பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

[6] தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,

[7] அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,

[8] அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.

[9] இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.

சங்கீதங்கள் — Chapters