Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:44

[1] பரலோகத்தில் இருக்கிறவரே, உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.

[2] தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

[3] எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, எங்களுக்கு இரங்கும்; அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

[4] சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

சங்கீதங்கள் — Chapters