Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:29

[1] அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

[2] யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.

[3] அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

[4] அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

[5] தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

[6] தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

[7] அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

[8] அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.

[9] அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

[10] யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதங்கள் — Chapters