Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:59

[1] என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

[2] என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

[3] உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

[4] யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

[5] சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.

[6] வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

[7] அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.

[8] யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

சங்கீதங்கள் — Chapters