[1] யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
[2] உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.
[3] யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
[4] திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
[5] உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.
சங்கீதங்கள் — Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150