[1] மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
[2] யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
[3] அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
[4] அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
[5] கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
[6] நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
[7] வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
[8] நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
சங்கீதங்கள் — Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150