[1] தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
[2] தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
[3] தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
[4] தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
[5] தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
[6] பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
[7] தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
சங்கீதங்கள் — Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150