[1] சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
[2] அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
[3] யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
[4] யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
[5] கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
[6] அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
சங்கீதங்கள் — Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150