[1] அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
[2] இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
[3] சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
[4] யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
[5] உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
[6] அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
[7] அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
[8] அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
[9] மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.