Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:58

[1] பின்னும் எலிகூ மறுமொழியாக:

[2] “என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?

[3] நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.

[4] உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.

[5] நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.

[6] நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?

[7] நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?

[8] உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.

[9] அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.

[10] பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,

[11] என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

[12] அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.

[13] தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.

[14] அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.

[15] இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.

[16] ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.

யோபு — Chapters