[1] பென்யமீனின் மகன்கள்: பேலா முதற்பேறானவன், இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக்,
[2] நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
[3] பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்;
[4] அபிசுவா, நாமான், அகோவா,
[5] கேரா, செப்புப்பான், ஊராம்.
[6] ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
[7] நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
[8] சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
[9] அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம்,
[10] எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள்.
[11] அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
[12] எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான்.
[13] எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
[14] அகியோ, சாஷாக், எரேமோத்
[15] செபதியா, அராத், ஏதேர்,
[16] மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
[17] செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
[18] இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
[19] யாக்கீம், சிக்ரி, சப்தி
[20] எலியேனாய், சில்தாய், எலியேல்,
[21] அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.
[22] இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
[23] அப்தோன், சிக்ரி, ஆனான்,
[24] அனனியா, ஏலாம், அந்தோதியா,
[25] இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
[26] சம்செராய், செகரியா, அத்தாலியா,
[27] யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
[28] இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
[29] கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
[30] இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
[31] கேதோர், அகியோ, சேகேர்,
[32] மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
[33] நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
[34] யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
[35] மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
[36] ஆகாஸ் யோகதாவின் தகப்பன்; யோகதா அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன். சிம்ரி மோசாவின் தகப்பன்.
[37] மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்,
[38] ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்களின் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேரின் மகன்கள்.
[39] அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத்.
[40] ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர். இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள்.