[1] ஆதாம், சேத், ஏனோஸ்,
[2] கேனான், மகலாலெயேல், யாரேத்,
[3] ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
[4] நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
[5] யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
[6] கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
[7] யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
[8] காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
[9] கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
[10] கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
[11] மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
[12] பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
[13] கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
[14] எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
[15] ஏவியர், அர்கீயர், சீனியர்,
[16] அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
[17] சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
[18] அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
[19] ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
[20] யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
[21] அதோராம், ஊசால், திக்லா,
[22] ஏபால், அபிமாயேல், சேபா,
[23] ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
[24] சேம், அர்பக்சாத், சேலா;
[25] ஏபேர், பேலேகு, ரெகூ,
[26] செரூகு, நாகோர், தேராகு,
[27] ஆபிராமாகிய ஆபிரகாம்.
[28] ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
[29] அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
[30] மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
[31] யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
[32] ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
[33] மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
[34] ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.
[35] ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
[36] எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
[37] ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.
[38] சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
[39] லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
[40] சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.
[41] ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
[42] ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
[43] இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
[44] பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
[45] யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
[46] உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
[47] ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
[48] சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
[49] சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
[50] பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
[51] ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
[52] அகோலிபாமா, ஏலா, பினோன்,
[53] கேனாஸ், தேமான், மிப்சார்,
[54] மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.