Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:27

[1] தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன்.

[2] கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன்.

[3] அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன்.

[4] இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.

[5] எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.

[6] அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,

[7] நோகா, நெப்பேக், யப்பியா,

[8] எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.

[9] தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி.

[10] சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; அவனுடைய மகன் அபியா; அவனுடைய மகன் ஆசா, அவனுடைய மகன் யோசபாத்.

[11] அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் அகசியா, அவனுடைய மகன் யோவாஸ்,

[12] அவனுடைய மகன் அமத்சியா, அவனுடைய மகன் அசரியா, அவனுடைய மகன் யோதாம்,

[13] அவனுடைய மகன் ஆகாஸ், அவனுடைய மகன் எசேக்கியா, அவனுடைய மகன் மனாசே,

[14] அவனுடைய மகன் ஆமோன், அவனுடைய மகன் யோசியா.

[15] யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாவது மகன் யோயாக்கீம், மூன்றாவது மகன் சிதேக்கியா. நான்காவது மகன் சல்லூம்.

[16] யோயாக்கீமின் மகன்கள்: அவன் மகன் எகொனியாவும், அவன் மகன் சிதேக்கியாவும்.

[17] சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் செயல்தியேல்,

[18] மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

[19] பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.

[20] இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.

[21] அனனியாவின் சந்ததிகள்: பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர்.

[22] செக்கனியாவின் சந்ததிகள்: செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர்.

[23] நெயெரியாவின் மகன்கள்: எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர்.

[24] எலியோனாயின் மகன்கள்: ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர்.

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் — Chapters