[1] லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
[2] கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
[3] அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
[4] எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
[5] அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
[6] ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
[7] மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
[8] அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
[9] அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
[10] யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.
[11] அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
[12] அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
[13] சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
[14] அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
[15] யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
[16] லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
[17] கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
[18] கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
[19] மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
[20] கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
[21] இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
[22] கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
[23] இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.
[24] இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
[25] எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
[26] எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
[27] இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
[28] சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா என்பவர்கள்.
[29] மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
[30] இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
[31] யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
[32] சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
[33] கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
[34] இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
[35] இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
[36] இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
[37] இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.
[38] இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
[39] இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
[40] இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
[41] இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன்.
[42] இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
[43] இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
[44] மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
[45] இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
[46] இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
[47] இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
[48] அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
[49] ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
[50] ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
[51] இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
[52] இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப்.
[53] இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.
[54] அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே,
[55] யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
[56] அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
[57] இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
[58] ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
[59] ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
[60] பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
[61] கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
[62] கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
[63] மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
[64] அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
[65] சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
[66] கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
[67] எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
[68] யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
[69] ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
[70] மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
[71] கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
[72] இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,
[73] ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
[74] ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
[75] உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
[76] நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
[77] மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
[78] எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
[79] கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
[80] காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும்,
[81] எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.