Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:00

[1] மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:

[2] ராஜாவுடைய கட்டளையின்படித் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பினிடத்திலிருக்கிற, ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

[3] யெகோவாவைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

[4] கொம்பைத் தொனிக்கச்செய்ய, தேவனுடைய காரியத்தில் ராஜாவுக்கு தீர்க்கதரிசியான வாலிபனாகிய ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.

[5] இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.

[6] இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.

[7] யெகோவாவைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, திறமைவாய்ந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களோடு அவர்கள் எண்ணிக்கைக்கு இருநூற்று எண்பத்தெட்டுப்பேர்களாக இருந்தார்கள்.

[8] அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணவனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.

[9] முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[10] மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[11] நான்காவது இஸ்ரி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[12] ஐந்தாவது நெதானியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[13] ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[14] ஏழாவது எசரேலா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[15] எட்டாவது எஷாயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[16] ஒன்பதாவது மத்தனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[17] பத்தாவது சிமேயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[18] பதினோராவது அசாரியேல், அவனுடைய மகன்கள் அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[19] பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[20] பதின்மூன்றாவது சுபவேல், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[21] பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[22] பதினைந்தாவது எரேமோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[23] பதினாறாவது அனனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[24] பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[25] பதினெட்டாவது அனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[26] பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[27] இருபதாவது எலியாத்தா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[28] இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[29] இருபத்திரண்டாவது கிதல்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[30] இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

[31] இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.

1 நாளாகமம் — Chapters