Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:50

[1] ஆதாம், சேத், ஏனோஸ்,

[2] கேனான், மகலாலெயேல், யாரேத்,

[3] ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

[4] நோவா, சேம், காம், யாப்பேத்.

[5] யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

[6] கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

[7] யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

[8] காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.

[9] கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.

[10] கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.

[11] மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,

[12] பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.

[13] கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,

[14] எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,

[15] ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,

[16] அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.

[17] சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.

[18] அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

[19] ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

[20] யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,

[21] அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

[22] ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

[23] ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.

[24] சேம், அர்பக்சாத், சாலா,

[25] ஏபேர், பேலேகு, ரெகூ,

[26] செரூகு, நாகோர், தேராகு,

[27] ஆபிராமாகிய ஆபிரகாம்.

[28] ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

[29] இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

[30] மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

[31] யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.

[32] ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.

[33] மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.

[34] ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.

[35] ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

[36] எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

[37] ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

[38] சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.

[39] லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

[40] சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.

[41] ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.

[42] திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

[43] இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.

[44] பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

[45] யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

[46] ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.

[47] ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

[48] சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

[49] சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

[50] பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.

[51] ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,

[52] அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

[53] கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

[54] மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

1 நாளாகமம் — Chapters