[1] தேவரோட குடினபுட்டு யேசு பொறபட்டு ஓய்கோண்டு இருவாங்க, அவுரோட சீஷருகோளு தேவரோட குடி கட்டடகோளுன அவுரியெ தோர்சுவுக்காக அவுரொத்ர பந்துரு.
[2] யேசு அவுருகோளொத்ர, “இதுகோளு எல்லாத்துனவு நோடுத்தாரியே, ஈ எடதுல ஒந்து கல்லு மேல ஒந்து கல்லு இல்லாங்க எல்லாவு இடுஞ்சோவுக்கு ஓகுத்தாத அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.
[3] யேசு ஒலிவ மரா பெட்டது மேல குத்துயிருவாங்க, சீஷருகோளு அவுரொத்ர தனியாங்க பந்து, “இதுகோளு ஏவாங்க நெடைவுது? நீமு திருசி பருவுதுக்குவு, ஒலகா அழுஞ்சோவுதுக்குவு அடெயாளா ஏனு? நமியெ ஏள்ரி” அந்து கேளிரு.
[4] யேசு அவுருகோளொத்ர, “ஒந்தொப்புருவு நிம்முன ஏமாத்துலாங்க இருவுக்கு கவனவாங்க இருரி.
[5] ஏக்கந்துர, தும்ப ஆளுகோளு நன்னு பேருன மடகிகோண்டு பந்து, ‘நானுத்தா கிறிஸ்து’ அந்தேளி தும்ப ஆளுகோளுன ஏமாத்துவுரு.
[6] நீமு யுத்தகோளுன பத்திவு, யுத்தகோளு நெடைத்தாத அந்து பொய்யாங்க ஏளுவுது சேதிகோளுன பத்திவு கேள்விபடுவுரி. ஆதர மனசு கலங்குலாங்க கவனவாங்க இருரி. இதுகோளு எல்லாவு நெடைபேக்கு. ஆதிரிவு ஒலகதோட முடிவு ஆகவே பர்னார்து.
[7] ஜாதிஜனக்கு எதுராங்க ஜாதிஜனவு, ராஜ்ஜியக்கு எதுராங்க ராஜ்ஜியவு ஜகளயிடிவுரு. தும்ப எடகோளுல பஞ்சகோளுவு, நெலநடுக்ககோளுவு பருவுது.
[8] இதுகோளு எல்லாவு ஒந்து எங்கூசியெ மொகு எருவாங்க பருவுது நோவு மாதரயிருவுது நோவியெ ஆரம்பா.
[9] ஆக, ஜனகோளு நிம்முன கஷ்டபடுசுவுக்கு ஒப்புகொட்டு, சாய்கொலுசுவுரு. நீமு நனியாக பதுக்குவுதுனால எல்லா ஜாதிஜனகோளுவு நிம்முன வெறுத்துவுரு.
[10] ஆக, தும்ப ஆளுகோளு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கென புட்டுகோட்டு, அதிகாரிகோளு கைது மாடுவுக்காக ஒந்தொப்புருன ஒந்தொப்புரு தோர்சிகொடுவுரு; ஒந்தொப்புருன ஒந்தொப்புரு வெறுத்துவுரு.
[11] தேவரொத்ர இத்து பந்த மாத்து அந்து பொய்யி ஏளுவோரு தும்ப ஆளுகோளு பந்து, தும்ப ஜனகோளுன ஏமாத்துவுரு.
[12] தேவரியெ விருப்பவிருனார்த காரியகோளுன மாடுவோரு அதிகவாங்க ஆவுதுனால தும்ப ஆளுகோளு மத்தோரொத்ர தோர்சுவுது அன்பு கொறெஞ்சோவுது.
[13] ஆதர கடெசி வரெக்குவு நெலச்சு இருவோன்ன தேவரு காப்பாத்துவுரு.
[14] ஒலக முழுசுவு இருவுது எல்லா ஜாதிஜனகோளியெ சாச்சியாங்க ஏளுவுக்கு தேவரோட ஆட்சின பத்தித ஈ ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுரு. அதுக்கு இந்தாலத்தா ஒலகதோட முடிவு பருவுது.
[15] அதுனால தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத தானியேலு, தொட்டு அழிவுன கொண்டுகோண்டு பருவுது அருவெருப்புன பத்தி ஏளியித்தானையே. அதுன படிச்சுதோனு புருஞ்சுகோம்பேக்கு. நீமு அதுன தேவரோட குடியோட தும்ப சுத்தவாத எடதுல நில்லுவுதுன நோடுவாங்க,
[16] யூதேயா ஜில்லாவுல இருவோரு தப்புசுவுக்கு பெட்டகோளியெ ஓடியோகுபேக்கு.
[17] மனெ மேல இருவுது ஒந்தொப்பா அவுனோட மனெல இருவுதுன எத்திகோம்புக்கு கெழக எறங்குலாங்க இராட்டு.
[18] கெத்தெல கெலசமாடிகோண்டு இருவோனு அவுனோட துணின எத்துவுக்குகூட மனெயெ திருசி ஓகுலாங்க இராட்டு.
[19] ஆ தினகோளுல கர்பவாங்க இருவோரியெவு, ஆலு கொடுவுது அவ்வெகோளியெவு ஐயோ.
[20] ஈங்கே நீமு ஓடியோவுது சளி காலதுலையாவுது, மழெ ஒய்வுது காலதுலையாவுது, ஓய்வு தினதுலையாவுது நெடைலாங்க இருவுக்கு தேவரொத்ர வேண்டிகோரி.
[21] ஏக்கந்துர தேவரு ஈ ஒலகான உண்டுமாடிதுல இத்து இந்தியெ வரெக்குவு, இனிமேலுவு, நெடைலாங்க இருவுது தொட்டு கஷ்டகோளுவு ஆக பருவுது.
[22] தேவரு ஆ தினகோளுன கம்மி மாடுலாங்க இத்துரெ ஒந்தொப்புனுவு தப்புசி ஓவுது இல்லா. ஆதிரிவு தேவரு அவுரு தெளுகோண்டோரியாக ஆ தினகோளுன கம்மி மாடுவுரு.
[23] ஆ காலதுல யாராசி நிம்மொத்ர பந்து, ‘இதே நோடுரி, கிறிஸ்து இல்லி இத்தார; இல்லாந்துர அல்லி இத்தார’ அந்து ஏளிரெ அதுன நம்புபேடரி.
[24] ஏக்கந்துர அவுருகோளுத்தா கிறிஸ்து அந்து பொய்யாங்க ஏளுவோருவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு அந்து பொய்யி ஏளுவோருவு பந்து முடுஞ்சுரெ, தேவரு தெளுகோண்டோருனவுகூட ஏமாத்துவுக்காக அவுருகோளு தொட்டு அடெயாளகோளுனவு, அற்புதகோளுனவு மாடுவுரு.
[25] இதே நோடுரி, இதுகோளு எல்லாத்துன பத்திவு முந்தாலயே நானு நிமியெ ஏளியித்தவனி
[26] அதுனால, யாராசி நிம்மொத்ர பந்து, ‘இதே, அவுரு அல்லி வனாந்தரவாத எடதுல இத்தார’ அந்து ஏளிரெ அல்லி ஓகுலாங்க இருரி; ‘இதே அவுரு ரூம்பொழக இத்தார’ அந்து ஏளிரெ அதுன நம்புபேடரி.
[27] ஏக்கந்துர, மின்னலு கேடெ தெசெல இத்து பந்து படுவா தெசெ வரெக்குவு பிரகாசவாங்க இருவுது மாதர சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு திருசி பருவுதுவு இருவுது.
[28] எணா எல்லி இத்தாதையோ அல்லி கழுகுகோளு பந்து சேருவுது.
[29] தொட்டு கஷ்டகோளு பருவுது தினகோளு பந்து முடுஞ்சுதுக்கு இந்தால, ஆகவே சூரியனு கத்தளெயாங்க ஆயோவுது. நிலாவு இனி பெளுசான கொடுனார்து. பானதுல இத்து நச்சத்திரகோளு கெழக பிழுவுது. பானதுல பெலவாங்க இருவுது எல்லாத்துனவு தேவரு அசெச்சுவுரு.
[30] ஆக சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு திருசி பருவுக்கோவுது அடெயாளா பானதுல தெளிவுது. ஆக, சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு, பெலதோடைவு, தும்ப பிரகாசதோடைவு பானதுல மேககோளு மேல பருவுதுன பூமில இருவுது எல்லா கொலகோளுனவு நோடி அத்து பொலம்புவுரு.
[31] அவுரு அவுரோட தூதாளுகோளுன தும்ப சத்தவாங்க இருவுது எக்காள சத்ததோட கெளுசுவுரு. அவுருகோளு தேவரு தெளுகோண்டோருன பானதோட ஒந்து மொனெல இத்து இன்னொந்து மொனெ வரெக்குவு இருவுது நாக்கு தெசெகோளுல இத்துவு கூட்டி சேர்சுவுரு.
[32] ஈக அத்தி அண்ணு மரதுல இத்து ஒந்து பாடான கத்துகோரி. அதோட கெளெகோளு துளுருபுட்டு எலெகோளுன புடுவாங்க பிசுலு காலா ஒத்ர பந்துபுடுத்து அந்து நீமு தெளுதுயித்தாரி.
[33] ஆங்கேயே ஈ காரியகோளு எல்லாவு நெடைவுதுன நீமு நோடுவாங்க, அவுரு பருவுது ஒத்து ஒத்ர பந்துபுடுத்து அந்துவு, அவுரு பாக்குலொத்ரவே பந்துபுட்டுரு அந்துவு தெளுகோரி.
[34] இதுகோளு எல்லாவு நெடைவுக்கு முந்தால ஈ தலெகட்டுல இருவோரு அழுஞ்சோகுனார்ரு அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி.
[35] பானவு, பூமிவு அழுஞ்சோவுது. ஆதர நன்னு மாத்துகோளு ஏவாங்குவு அழுஞ்சோகுனார்து.
[36] இன்னுவு ஆ தினான பத்திவு, ஆ ஒத்துன பத்திவு நன்னு அப்பாவாத தேவரு ஒந்தொப்புருன தவர பேற யாரியெவு தெளினார்து. அவுரோட மகனியெவு, சொர்கதுல இருவுது தேவரோட தூதாளுகோளியெவு தெளினார்து.
[37] நோவாவோட காலதுல ஏங்கே நெடதுத்தோ ஆங்கேயே சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு பருவுது காலதுலைவு நெடைவுது.
[38] ஏங்கந்துர, தொட்டு பெள்ளா பருவுக்கு முந்தால இத்த காலதுல, நோவா படகு ஒழக ஓவுது வரெக்குவு ஜனகோளு உண்டுகோண்டுவு, குடுதுகோண்டுவு, மதுவெ மாடிகோண்டுவு, மதுவெ மாடி கொட்டுகோண்டுவு இத்துரு.
[39] அவுருகோளு எல்லாருனவு தொட்டு பெள்ளா பந்து படுக்கோண்டு ஓவுது வரெக்குவு, ஏனு நெடைத்தாத அந்து அவுருகோளு ஒணருலாங்க இத்துரு. இது மாதரயே சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு பருவுது காலதுலைவு நெடைவுது.
[40] ஆக, எரடு ஆளுகோளு கெத்தெல கெலசமாடிகோண்டு இருவுரு. அதுல ஒந்தொப்புன்ன தேவரு ஏத்துகோம்புரு. இன்னொந்தொப்புன்ன ஏத்துகோனார்ரு.
[41] எரடு எங்கூசுகோளு ராய்கல்லுல மாவு ஆடுசிகோண்டு இருவுரு. அதுல ஒந்தொப்புளுன தேவரு ஏத்துகோம்புரு. இன்னொந்தொப்புளுன ஏத்துகோனார்ரு.
[42] நிம்மு ஆண்டவரு ஏ தினதுல பருவுரு அந்து நிமியெ தெளினார்துனால முழுச்சுகோண்டு இருரி.
[43] இருளுல திருடா ஏ ஒத்துல பருவா அந்து மனெயோட சொந்தகாரனியெ தெளுது இத்துரெ அவ முழுச்சுகோண்டு இத்து அவுனோட மனென திருடா ஒடது ஒழக ஓவுக்கு புடுனார்ரா அந்து நிமியெ தெளிவுது.
[44] நீமு எதுருநோடுனார்த ஒத்துல, சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு பருவுரு. அதுனால நீமு தயாராங்க இருபேக்கு.
[45] செரியாத ஒத்துல அவுனோட மனெல இருவுது கெலசக்காரருகோளியெ கூளுன கொடுவுக்காக மொதலாளி மடகியிருவுது உண்மெயாத, ஞானவாங்க இருவுது பொறுப்பாளி யாரு?
[46] அவுனோட மொதலாளி திருசி பருவாங்க அவுனோட கெலசான மாடிகோண்டு இருவுது கெலசக்காரத்தா கொட்டுமடகிதோனு.
[47] அவுன்னத்தா மொதலாளி அவுனியெ இருவுது சொத்துகோளு எல்லாத்துனவு நோடிகோம்புது பொறுப்பாளியாங்க மடகுவா அந்து நெஜவாங்கவே நானு நிமியெ ஏளுத்தினி.
[48] ஆதர ஆ கெலசக்காரா மோசவாதோனாங்க இத்து, ‘நன்னு மொதலாளி தூர தேசதுல இத்து திருசி பருவுக்கு தும்ப காலா ஆவுது’ அந்து அவுனொழக ஏளிகோண்டு,
[49] அவுனுகூட கெலசமாடுவோருன படிவுக்குவு, குடிகாரருகோளுகூட சேந்துகோண்டு உண்ணுவுக்குவு, குடிவுக்குவு ஆரம்புசிரெ
[50] ஆ கெலசக்காரா நெனசுனார்த தினதுலைவு, அவ எதுருநோடுனார்த ஒத்துலைவு, அவுனோட மொதலாளி திருசி பந்து,
[51] ஆ கெலசக்காரன்ன தும்ப தண்டுசி, அவுன்ன வெளிவேஷகாரருன ஆக்குவுது எடதுல ஆக்குவா. அல்லி அழுகாச்சிவு, அல்லுன கச்சுவுதுவு இருவுது” அந்தேளிரு.