[1] பரிசேயரு, சதுசேயரு அம்புது கூட்டகோளுன சேந்தோருல கொஞ்ச ஆளுகோளு யேசுன சோதுச்சுவுக்காக அவுரொத்ர பந்து, பானதுல இத்து ஒந்து அடெயாளான அவுருகோளியெ தோர்சுபேக்கு அந்து கேளிரு.
[2] அதுக்கு அவுரு அவுருகோளொத்ர, “ஒத்து மறெஞ்சோவாங்க பானா செவப்பாங்க இத்தாத. அதுனால கால நெலெமெ சென்னங்க இருவுதுந்து ஏளுத்தாரி.
[3] ஒத்து உட்டுவாங்க பானா செவப்பாங்கவு, மந்தாரவாங்கவு இருவுதுனால இந்தியெ காளிவு மழெயுவு இருவுதுந்து ஏளுத்தாரி. வெளிவேஷகாரரே, நிம்முனால பானதோட நெலெமென நிதானுசுவுக்கு முடுஞ்சுத்தாதையே. ஆதர காலகோளோட அடெயாளகோளுன நிதானுசுவுக்கு நிம்முனால முடுஞ்சுலவா?
[4] தேவரொத்ர உண்மெ இல்லாங்க இருவுது ஈ மோசவாத தலெகட்டு அடெயாளான தேடுத்தார. தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனாத யோனாவோட அடெயாளான தவர பேற ஏ அடெயாளானவு இவுருகோளியெ கொடுவுது இல்லா” அந்து ஏளிகோட்டு அவுருகோளுனபுட்டு பொறபட்டு ஓதுரு.
[5] யேசுவோட சீஷருகோளு கெரெயோட அக்கரெயெ ஓயி சேருவாங்க, அவுருகோளு ரொட்டிகோளுன கொண்டுகோண்டு பருவுக்கு மறதோதுரு.
[6] யேசு அவுருகோளொத்ர, “பரிசேயரு, சதுசேயரு அம்புது கூட்டான சேந்தோரோட உளியேறித மாவுன பத்தி கவனவாங்க இருரி” அந்தேளிரு.
[7] அவுருகோளு ரொட்டிகோளுன கொண்டுகோண்டு பருனார்துனால ஈங்கே ஏளுத்தார அந்து அவுருகோளு அவுருகோளொழக ஓசனெ மாடிகோண்டுரு.
[8] யேசு அதுன தெளுகோண்டு, “நம்பிக்கெல கொறெயாங்க இருவோரே, நீமு ரொட்டிகோளுன கொண்டுகோண்டு பர்லா அம்புதுன பத்தி ஏக்க நிம்மொழக ஓசனெ மாடுத்தாரி?
[9] நீமு இன்னுவு புருஞ்சுகோலவா? ஐது ரொட்டிகோளுன ஐதாயிரா ஆளுகோளியெ கொட்டு, மிச்சவாத ரொட்டி துண்டுகோளுன ஏசு கூடெகோளு தும்ப எத்திரி அந்து நிமியெ நாபகவில்லவா?
[10] இல்லாந்துர, ஏழு ரொட்டிகோளுன நாக்காயிரா ஆளுகோளியெ கொட்டு, மிச்சவாத ரொட்டி துண்டுகோளுன ஏசு கூடெகோளு தும்புசி எத்திரிம்புதுவு நிமியெ நாபகவில்லவா?
[11] பரிசேயரு, சதுசேயரு அம்புது கூட்டகோளுன சேந்தோரோட உளியேறித மாவுன பத்தி கவனவாங்க இருபேக்கு அந்து நானு ஏளிது அவுருகோளோட ரொட்டிகோளுன பத்தி ஏளுலா அந்து நீமு புருஞ்சுலாங்க இருவுது ஏங்கே” அந்தேளிரு.
[12] ஆக அவுரு உளியேறித மாவுன பத்தி கவனவாங்க இருபேக்கு அந்து ஏளுலாங்க, பரிசேயரு, சதுசேயரு அம்புது கூட்டகோளுன சேந்தோரு ஏளிகொடுவுதுன பத்தித்தா ஆங்கே ஏளிரு அந்து தெளுகோண்டுரு.
[13] அப்பறா யேசு, பிலிப்பு செசரியா அம்புது பட்டணக்கு ஒத்ர இருவுது எடக்கு பருவாங்க, அவுரோட சீஷருகோளொத்ர, “சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருன ஜனகோளு யாரு அந்து ஏளுத்தார?” அந்து கேளிரு.
[14] அதுக்கு அவுருகோளு, “கொஞ்ச ஆளுகோளு நிம்முன யோவானு ஸ்நானனு அந்துவு, கொஞ்ச ஆளுகோளு எலியா அந்துவு, பேற கொஞ்ச ஆளுகோளு எரேமியா இல்லாந்துர தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோருல ஒந்தொப்புரு அந்துவு ஏளுத்தார” அந்தேளிரு.
[15] ஆக யேசு, “நீமு நன்னுன யாரு அந்து ஏளுத்தாரி” அந்து கேளிரு.
[16] அதுக்கு சீமோனு பேதுரு, “நீமு உசுரோட இருவுது தேவரோட மகனாத கிறிஸ்து” அந்தேளிதா.
[17] யேசு அவுனொத்ர, “யோனாவோட மகனாத சீமோனே, நிய்யி கொட்டுமடகிதோனு. ஏக்கந்துர இதுன நினியெ ஏ மனுஷனுவு வெளிபடுசுலா. சொர்கதுல இருவுது நன்னு அப்பாவாத தேவருத்தா நினியெ இதுன வெளிபடுசி இத்தார.
[18] அதுனால நானு நினியெ ஏளுத்தினி, நிய்யி பேதுருவாங்க இத்தாயி. ஒந்து கட்டடான கட்டுவுது மாதர நானு நன்னுன நம்புவோரு கூட்டான பாறெ மாதரயிருவுது நின்னு மேல கட்டுவே. அதுன அழுசுவுக்கு சாவியெகூட பெலா இருனார்து.
[19] சொர்கதோட ஆட்சியெ இருவுது அதிகாரான நினியெ கொடுவே. நிய்யி பூமில எதுன கட்டி மடகுத்தாயோ அதுன நானு சொர்கதுல கட்டி மடகுவே. நிய்யி பூமில எதோட கட்டுன கழசுத்தாயோ அதுன நானு சொர்கதுல கழசுவே” அந்தேளிரு.
[20] ஆக, அவுருத்தா கிறிஸ்து அம்புதுன ஒந்தொப்புரியெவு ஏளுலாங்க இருவுக்கு அவுரோட சீஷருகோளியெ கட்டளெ கொட்டுரு.
[21] ஆ ஒத்துல இத்து யேசு, அவுரோட சீஷருகோளொத்ர, அவுரு எருசலேமியெ ஓகுபேக்கு அந்துவு, அல்லி தொட்டோருவு, தொட்டு பூஜேரிகோளுவு, யூதமத சட்டான ஏளிகொடுவோருவு அவுருன தும்ப கஷ்டபடுசி சாய்கொலுசுவுரு அந்துவு, மூறாவுது தினதுல அவுரு உசுரோட எத்துருவுருந்துவு ஏளுவுக்கு ஆரம்புசிரு.
[22] ஆக பேதுரு அவுருன தனியாங்க கூங்கிகோண்டு ஓயி, “ஆண்டவரே, பேடா. ஈங்கே நிமியெ நெடையவே கூடாது” அந்தேளி அவுருன தும்ப பொய்வுக்கு ஆரம்புசிதா.
[23] ஆதர யேசு பேதுருன திருகி நோடி, “நனியெ இந்தால ஓகு சாத்தானே, நிய்யி நனியெ தடெயாங்க இத்தாயி; நிய்யி தேவரியெ ஏத்த மாதர நெனசுலாங்க, மனுஷரியெ ஏத்த மாதர நெனசுத்தாயி” அந்தேளிரு.
[24] ஆக, யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “ஒந்தொப்பா நன்னு சீஷனாங்காவுக்கு விரும்பிரெ, அவ அவுனோட விருப்பகோளுன வெறுத்துகோட்டு, அவுனோட சிலுவென எத்திகோண்டு நன்னு இந்தால பருபேக்கு.
[25] அவுனோட உசுருன காப்பாத்திகோம்புக்கு விரும்புவோனு அதுன எழந்தோவா. ஆதர நனியாக அவுனோட உசுருன எழந்தோவோனு அதுன காப்பாத்திகோம்பா.
[26] ஒந்தொப்பா ஈ ஒலகா முழுசுனவு அவுனியெ சொந்தவாங்க ஆக்கிகோண்டுரிவு, அவ அவுனோட பதுக்குன எழந்தோதுரெ அவுனியெ ஏனு லாபா? அவ அவுனோட பதுக்கியெ ஈடாங்க எதுன கொடுவா?
[27] சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு அப்பாவாத தேவரு கொடுவுது அதிகாரதோட அவுரோட தூதாளுகோளுகூட பருவுரு. ஆக ஒவ்வொந்தொப்புனியெவு அவஅவ மாடித காரியகோளியெ ஏத்த பலன்ன கொடுவுரு.
[28] இல்லி நிந்துகோண்டு இருவோருல கொஞ்ச ஆளுகோளு சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு ராஜாவாங்க பருவுதுன நோடுவுக்கு முந்தால சாய்னார்ரு அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.