About
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அனிருத் இசையமைத்த 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' மற்றும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.