[1] பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
[2] செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
[3] பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
[4] செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
[5] ஆராகின் சந்ததி 775 பேர்,
[6] யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
[7] ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
[8] சத்தூவின் சந்ததி 945 பேர்,
[9] சக்காயின் சந்ததி 760 பேர்,
[10] பானியின் சந்ததி 642 பேர்,
[11] பெபாயின் சந்ததி 623 பேர்,
[12] அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
[13] அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
[14] பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
[15] ஆதீனின் சந்ததி 454 பேர்,
[16] எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
[17] பேஸாயின் சந்ததி 323 பேர்,
[18] யோராகின் சந்ததி 112 பேர்,
[19] ஆசூமின் சந்ததி 223 பேர்,
[20] கிபாரின் சந்ததி 95 பேர்.
[21] பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
[22] நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
[23] ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
[24] அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
[25] கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
[26] ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
[27] மிக்மாசின் மனிதர் 122 பேர்,
[28] பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
[29] நேபோவின் மனிதர் 52 பேர்,
[30] மக்பீசின் மனிதர் 156 பேர்,
[31] மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
[32] ஆரீமின் மனிதர் 320 பேர்,
[33] லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
[34] எரிகோவின் மனிதர் 345 பேர்,
[35] செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
[36] ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
[37] இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
[38] பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
[39] ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
[40] லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
[41] பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
[42] ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
[43] திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
[44] கேரோசு, சீயாகா, பாதோன்,
[45] லெபானா, அகாபா, அக்கூப்,
[46] ஆகாப், சல்மாயி, ஆனான்,
[47] கித்தேல், காகார், ரயாயா,
[48] ரேசீன், நெக்கோதா, காசாம்,
[49] ஊசா, பாசெயா, பேசாய்,
[50] அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
[51] பக்பூக், அகுபா, அர்கூர்,
[52] பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
[53] பர்கோஸ், சிசெரா, தேமா,
[54] நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
[55] திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
[56] யாலா, தர்கோன், கித்தேல்,
[57] செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
[58] ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
[59] பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
[60] அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
[61] ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
[62] இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
[63] ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
[64] எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
[65] இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
[66] அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
[67] 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
[68] அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
[69] அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
[70] ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.